ரயில்வே லெவல் கிராசிங் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி

80பார்த்தது
வேலூர் மாவட்டம்

காட்பாடி அருகே உள்ள ரயில்வே லெவல் கிராசிங்
திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி

கனரக வாகனங்கள் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் கிராம பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராஸிங்
காட்பாடி பகுதியில் இருந்து பள்ளி குப்பம், கம்மவார் புத்தூர், சேர்க்காடு , வள்ளி மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த வழிதான் செல்ல வேண்டும்
லெவல் கிராசிங்கை தான் கடந்து தான் வர வேண்டும்

சேர்காடு பகுதியில் தான் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது

இந்த ரயில்வே தண்டவாளங்களை கடக்க ஒரு சுரங்கப்பாதை உள்ளது இதன் வழியாகவே
தற்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்கின்றன கனரக வாகனங்கள் 25 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை. மேலும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

இந்த வழியாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் 26 முதல் 29 தேதி வரை 4 நாட்கள் பராமரிப்பு பணிக்காக இந்த ரயில்வே லெவல் கிராசிங் மூடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி