மதுபான கடைக்கு கடையின் உரிமையாளர் பூட்டு போட்டதால் பரபரப்பு

59பார்த்தது
மதுபான கடைக்கு கடையின் உரிமையாளர் பூட்டு போட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சம் பேட்டை பகுதியை சார்ந்த ஆஞ்சி கவுண்டர் மகன் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி பாரதி என்கிற மனைவியும் சாய் குமரன் என்கிற மகனுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஏ.ஆர்.சி காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் வீடுகள் மற்றும் அதை சுற்றி பதினொரு கடைகள் உள்ளன. இந்நிலையில் அந்த கடையில் ஒரு கடையை கடந்த 2016 ஆம் ஆண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளனர். அதன்பின்னர் காஞ்சி கவுண்டர் மற்றும் அவனுடைய மகன் ஆறுமுகம் உயிரிழந்துள்ளனர்.

ஒப்பந்தம் முடிந்த நிலையிலும் கடந்த நான்கு வருட காலமாக 7500 க்கு வாடகை அளித்து வந்துள்ளனர். மதுபான கடை டி எம் பி இடம் வேறு இடத்திற்கு கடையை மாற்ற வேண்டி கோரிக்கை மனுக்களும் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கடையை காலி செய்ய கோரி ஏழு முறை மனுக்களை கொடுத்துள்ளார்.
இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று நற்பகல் 12:00 மணி அளவில் பாரதி மதுபான கடைக்கு பூட்டு போட்டு கடையை திறக்க கூடாது எனவும், மதுபான கடையை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையின் பார்வையாளர் பிரேம் ஆனந்த் மற்றும் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓரிரு நாட்களில் கடையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாக கூறியதன் காரணமாக எழுதித்தர வேண்டி பாரதி கேட்டுள்ளனர். பிறகு ஜோலார்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜிடம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் மதுபான கடையை திறந்தவுடன் மது பிரியர்கள் சரளமாக குவிந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர். மதுபானக் கடைக்கு பூட்டு போட்டதால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.