போதை பொருள் தடுப்பு குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

65பார்த்தது
*நாட்றம்பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி. மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு*

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய சாலைகள் வழியாக வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியை ஷோபனா ஒருங்கிணைப்பில் ஏஎஸ்பி அசுமி தலைமையில் நாட்டு திட்ட பணி மாணவிகள் தேசிய மாணவர் படை மாணவிகள் கல்லூரி மாணவிகள் தூய்மை இந்தியா பேராசிரியைகள் என சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்து பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் வாணியம்பாடி டி. எஸ். பி விஜயகுமார் காவல் ஆய்வாளர்கள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் நாட்டு நல பணி திட்ட அலுவலர் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக கல்லூரி மாணவிகளுக்கு ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி அறிவுரைகள் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி