பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற இளைஞர்

52பார்த்தது
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற இளைஞர்
ஆம்பூர் அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டதற்கு 50 ரூபாய் பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய அவரிடம் இருந்து ரூபாய் 7 ஆயிரத்தை இளைஞர்கள் பறித்துச் சென்றனர். படுகாயங்களுடன் பெட்ரோல் பங்க் ஊழியர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுபறித்துச்சென்றுள்ளனர்.

வாணியம்பாடி, செப். 11- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் பங்கில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், 50 ரூபாயிற்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.

பின்னர் பெட்ரோல் போட்டதற்கு, பெட்ரோல் பங்க் ஊழியர் குணசேகரன் என்பவர் இளைஞர்களிடம் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் குணசேகரனை சரமாரியாக தாக்கிய பின்னர் அவர் கையில் வைத்திருந்த ரூபாய் 7 பணத்தையும் பறித்துச்சென்றுள்ளனர்

இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த குணசேகரணை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல் பங்கில் இளைஞர்கள், குணசேகரனை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பங்கு ஊழியரை தாக்கிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you