லாரியில் 70டன் ரேஷன் அரிசி கடத்தல் -குடியாத்தத்தில் பரபரப்பு

50பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராணிப்பேட்டையில் இருந்து 2 லாரிகளில் சுமார் 70 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குடியாத்தம் நகர போலீசார் குடியாத்தம் காட்பாடி சாலையில் சேத்துவண்டை பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திரப் பதிவு எண் கொண்ட ஒரு லாரி மற்றும் தமிழக பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி இருப்பது பெரிய வந்தது.

இதனையடுத்து ஓட்டுனர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் கிடங்கிற்க்கு அரிசி கொண்டு செல்வதாக தெரிவித்தனர். மேலும் ஆவணங்கள் ஆன்லைனில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதனையடுத்து விசாரணைக்காக இரண்டு லாரிகளையும் வேலூருக்கு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு அதிகாரிகள் கொண்டு சென்றனர். மேலும் அங்கு விசாரணை மேற்கொண்டதில் மாவட்ட வழங்கல் மேலாளர் மற்றும் குடிமை பொருள் அதிகாரிகள் உரிய ஆவணங்களை சரி பார்த்த பின்னர் இரண்டு லாரிகளையும் விடுவித்தனர். 70 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பரவிய தகவலால் குடியாத்தம் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி