பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாளான ஜென்மாஷ்டமி நாளை (ஆக., 26) கொண்டாடப்படுகிறது. இந்நாளில், குழந்தை வடிவில் உள்ள கிருஷ்ணரின் சிலையை வழிபடுவதால், வாழ்வில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணரிடம் புல்லாங்குழல் வைத்து வழிபட்டால், வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது. மயில் பீலி வைப்பது செழிப்பு தரும். வீட்டில் செல்வம் பெருகும். பசு மற்றும் கன்று சிலையை வாங்கி பூஜை அறையில் வைப்பதால் பிள்ளைகளுக்கு செழிப்பு உண்டாகும்.