திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் (இன்று நவம்பர் 6) மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, உமராபாத், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்தனர்.