அரசு பள்ளி ஆசிரியர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி

84பார்த்தது
அரசு பள்ளி ஆசிரியர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி
வாணியம்பாடி தொகுதி ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீதரன் மற்றும் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் கணபதி ஆகியோர் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆலங்காயம் திஷா பேட்மிண்டன் அகாடமியின் உரிமையாளர் பாலமுரளி, திருப்பத்தூர் வட்ட தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு பொறுப்பாளர் சாம்ராஜ், நிம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சற்குணகுமார் மற்றும் அகாடமி உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி