பாஜகவில் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த திருச்சி
சூர்யா அந்த கட்சியில் இருந்து விலகிய நிலையில், வருகிற 5-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் மூத்த நிர்வாகியாக இருப்பவர் திருச்சி சிவா, இவரது மகன் திருச்சி
சூர்யா பாஜக பெண் நிர்வாகி ஒருவரை தகாத வார்த்தையில் திட்டியதால்
சூர்யா மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து கட்சியில் இருந்து விலகிய நிலையில், அண்ணாமலையை வசைபாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.