இன்றைய ராசிபலன் 27-12-2023

71076பார்த்தது
மேஷம்: உங்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்காது. மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது அவசியம். பணியிடத்தில் பணியில் சில தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. மேலும், சக பணியாளர்களுடன் சில பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். ரிஷபம்: இன்றைய நாள் வளர்ச்சி அடையக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் சரியாக திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் வெற்றி பெறலாம். பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணம் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம்: இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். நீங்கள் பொறுமையாகவும் அனுசரித்தும் செல்வது மிகவும் அவசியம். பணியிடத்தில் கவனமுடன் பணியாற்றுவது அவசியம். அதிகப்படியான செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடகம்: இன்று நீங்கள் பக்தியுடன் இருப்பதன் மூலம் உங்களின் பதட்டம் குறைந்து காணப்படும். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மனைவியிடம் மனம் திறந்து பேசுங்கள். கையில் செலவுக்கு பணம் இருக்காது. ஆரோக்கியத்தில் கணுக்கால் மற்றும் தோள்களில் வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். ஆகையால் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுதல் வேண்டும். மனைவியுடன் ஈகோவை தவிர்ப்பது நல்லது. வீட்டின் முன்னேற்றத்திற்காக செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்களின் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். துலாம்: உங்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். நீங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். பணியிடத்தில் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பண வரவு அதிகமாக இருக்கும். விருச்சிகம்: உங்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். நீங்கள் முக்கிய செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் முறையாக திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் பணிகளை விரைவில் முடிக்கலாம். துணையுடன் சிரித்து பேசி மகிழ்வதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணத்தை கவனமுடன் செலவு செய்யவேண்டும். ஆரோக்கியத்தில் தலைவலி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தனுசு: இன்று நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கவனமாக பணியாற்றுவது அவசியம். நீண்ட நாட்காள இழுபறியாக இருந்தவந்த காரியங்கள் கைகூடும். வாகனத்தில் வெளியே செல்லும்போது கவனமாக செல்லுங்கள். மகரம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெறுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். திருமணத்திற்கு பெண் தேடுபவர்களுக்கு வரன் அமையும். கும்பம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம், புதிய வீடு வாங்குவது போன்ற அனைத்து சுப காரியங்களும் கைகூடி வரும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்காது. திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி