இன்று 2வது மோடி அரசின் கடைசி பட்ஜெட்!

555பார்த்தது
இன்று 2வது மோடி அரசின் கடைசி பட்ஜெட்!
இன்று 2வது மோடி அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு, நலத்திட்டங்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான உதவிகள், வாகன உற்பத்தித்துறை, எரிபொருள் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை, காப்பீடு உள்ளிட்ட பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி