
TN: காவல் நிலையத்தில் புகுந்த பாம்பு.. அலறிய பெண் போலீசார்
சென்னை அண்ணா நகர் என்.எஸ்.கே. சாலை அருகில் அமைந்தகரை காவல் நிலையம் அமைந்துள்ளது. நேற்று (ஏப். 16) காலை பெய்த மழை காரணமாக பாம்பு ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த பெண் போலீசார் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். பின்னர் பாம்பை தேடிய போது அது காவல் நிலையத்தின் மற்றொரு வழியாக வெளியே சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெண் போலீசார் நிம்மதி அடைந்தனர்.