திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ. வ. வே. கம்பன், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.