திரௌபதியம்மன் ஆலயத்தில் துரியோதனன் படுகளம்.

59பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூரில் உள்ள மிகவும்
பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில்
அக்னி வசந்த விழா கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கி
வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

மேலும் பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் மகாபாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் நடைபெற்று இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது மேலும் திரௌபதி
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகஆராதனை நடைபெற்றன.

இந்நிலையில் அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான இன்று 21ம்நாளை
முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் பாஞ்சாலி சபதம் நிகழ்வையும்
துரியோதனனை வதம் செய்யும் காட்சியை தத்துரூபமாக நாடக கலைஞர்கள் நடித்து
காட்டி அசத்தினார்கள்.

இதில் போளூர், களம்பூர், சந்தவாசல், ஆரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம்
செய்தனர்.

தொடர்புடைய செய்தி