திருவண்ணாமலை மாவட்டம், போளூா், நடேசன் தெருவில் நரிக்குறவா் காலனி உள்ளது. இங்கு போதிய இடவசதி இல்லாதததால் போளூா் வட்டம், கொம்மனந்தல் கிராமத்தில் 73 நரிக்குறவா் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இதற்கான இடத்தை அளவீடு செய்துதர கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நரிக்குறவா் சமுதாய மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மண்டல துணை வட்டாட்சியா் மணிகண்டன், தலைமையிடத்து வட்டாட்சியா் காசி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அடுத்த 2 நாள்களில் இடம் அளவீடு செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா்.