பகுதி நேரமாக கலைகள் பயில புதிய பாடங்கள் அறிமுகம்

81பார்த்தது
பகுதி நேரமாக கலைகள் பயில புதிய பாடங்கள் அறிமுகம்
கல்லூரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் பகுதி நேரமாக கலைகள் பயில உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவ்வியல் கலை, கிராமியக்கலை, கவின் கலை ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு கலையில் முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இக்கலை பயிற்சி அளித்திட தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரியில் வியாழன், வெள்ளி கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தப்பாட்டம் பயிற்சி வழங்கப்படுகிறது. செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய், புதன் கிழமைகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராமிய நடனம், திருவண்ணாமலை கருணாநிதி அரசு கலை கல்லூரியில் புதன், வெள்ளி கிழமைகளில் பிற்பகல் 2. 15 முதல் பிற்பகல் 3. 15 குரலிசை பயிற்சி வழங்கப்பட உள்ளது.

டேக்ஸ் :