திருப்பூர் மாவட்டம்
உடுமலை தாலுகாவில் மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களில் பணியாற்றக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கேட்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை காலை 9 மணி முதல் துவங்கி உள்ளனர் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நான்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது குடிநீர் வடிகால் வாரியம் இப் பணியை தனியாருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது தயா கன்ஸ்ட்ரக்சன் ஈரோடு என்ற கம்பெனி இதை டெண்டர் எடுத்து இயக்கிக் கொண்டிருக்கிறது வருகின்ற தீபாவளிக்காக போனஸ் கேட்டபோது போனஸ் தர மறுத்துள்ளார்கள் ஊதிய உயர்வு தர மறுத்துள்ளார்கள் திருமூர்த்தி அணையில் பணியாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் இதனால் தாலுகா முழுவதும் இருக்கக்கூடிய பொது மக்களுக்கு தீபாவளி பண்டிகை நேரத்தில் குடிநீர் செல்வது என்பது தடைபடக் கூடிய சூழல் உள்ளது