திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்த கல்வி ஆண்டு முதல் தளி ரோட்டில் உள்ள நகராட்சி பழைய கட்டிடத்தில் அரசு இசைப்பள்ளி தொடங்க உள்ளது. இந்த பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் என குரல் இசை நாதஸ்வரம் தவில் தேவாரம் பரதநாட்டியம் வயலின் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு 350 மட்டும் செலுத்த வேண்டும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை 400 வழங்கப்படுகிறது. வருகிற 7ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது மேலும் தகவலுக்கு தலைமை ஆசிரியர் 9566473769 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.