சிறப்பு பிரார்த்தனை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

601பார்த்தது
சிறப்பு பிரார்த்தனை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்பூரில் புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
புனித கத்தரீனம்மாள் ஆலயம்
2023-ம் ஆண்டு நேற்று நிறைவடைந்து இன்று (திங்கட்கி ழமை) 2024 புதிய ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டையொட்டி திருப்பூரில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற் றது. பழைய வருட முடிவில் கடந்த ஆண்டு முழுவதும் நடத்தி வந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் பிரார்த்தனை யாகவும், புதிய ஆண்டு பிறந்த உடன் இந்த ஆண்டு முழுவ தும் இறைவன் உலக மக்கள் அனைவரையும் பாதுகாத்து, வழிநடத்த வேண்டியும் இந்த பிரார்த்தனை நடைபெற்றது. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலயத் தின் பங்குத்தந்தை அருள்ஜெபமாலை பிரார்த்தனை ஏறெடுத் தார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உதவி பங் குதந்தை அருள் சந்தோஷ், மற்றும் பங்கு பேரவை நிர்வாகி கள், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி