ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை

3300பார்த்தது
ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை
பெற்றோர் திட்டியதால் சோகம்! ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை

திருப்பூர் வஞ்சிப்பாளையம் அருகே சிறுவன் ஒருவன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை யில் இறந்தவன், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அருள்ஜோதி நகரை சேர்ந்த வினோத்குமார் (வயது 17) என்பது தெரியவந் தது. இவன் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து வீட்டில் இருந்தான். அடிக்கடி செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அவனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவனின் செல்போனையும் வாங்கி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மனம் உடைந்த வினோத்குமார், வீட்டுக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றவன், அந்த வழியாக அதிகாலையில் வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப் பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி