ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். நேற்று மாலை முதல் மாநகரின் முக் கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். பிரதான சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத் தும் பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் மாநகர் முழுவதும் 34 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. சாலைகளில் அதிவேகமாக இளைஞர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. தேவாலயங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட் டது. மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 850 போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். நள்ளி ரவு 1 மணி வரை ஒரு ஷிப்டாகவும், 1 மணி முதல் அதி காலை 6 மணி வரை மற்றொரு ஷிப்டாகவும் போலீசார் காவல் பணிக்கு நியமிக்கப்பட்டனர். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று விடிய, விடிய போலீசார் ரோந் துப்பணியில் ஈடுபட்டனர்.