காங்கேயம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி ஆய்வு

60பார்த்தது
காங்கேயம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி ஆய்வு
காங்கேயம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி ஆய்வு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்குட்பட்ட பழையகோட்டை சாலை அய்யாசாமி நகர் காலனி பிரிவில் நேற்று காலை மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார், வாடகை டாக்சிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வேன்கள், பேருந்துகள், ஆட்டோ, லாரி, டிராக்டர்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை அனைத்து வாகனங்கள் உரிய உரிமம் பெற்று இயங்கி வருகிறதா? , ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார்களா? , மேலும் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் பதிந்துள்ளனரா? என்று ஆய்வு செய்தார். இதில் உரிமம் இல்லாத வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்ற முன்னறிவிப்பின்றி திடீர் சோதனையில் ஈடுபட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன், மேலும் இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் எனவும், அனைவரும் முறையான உரிமம் பெற்று சொந்த பயன்பாட்டிற்கும் தனியார் வாடகைக்கும் வாகனத்தை ஓட்ட வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி