தாராபுரத்தில் உங்களை தேடி திட்டம் நாளை நடக்கிறது!

74பார்த்தது
தாராபுரத்தில் உங்களை தேடி திட்டம் நாளை நடக்கிறது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் இரண்டாம் கட்டமாக தாராபுரத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 22-ந் தேதி காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நாளை காலை முதல் மதியம் வரை இ-சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கசங்கங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் ஆய்வு நடக்கிறது.

மதியம் 2. 30 மணி முதல் மாலை 4. 30 மணி வரை தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அலுவலர்களின் கள ஆய்வு கூட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெறப்படுகிறது.

அதன்பிறகு அரசு விடுதிகள், பஸ் நிலையம், மருத்துவம்னைகளில் ஆய்வு நடக்கிறது. மறுநாள் காலை குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, பால்உற்பத்தி, முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு நடக்கிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி