கழிவுநீர் லாரி சிறை பிடிப்பு

57பார்த்தது
கழிவுநீர் லாரி சிறை பிடிப்பு
அவினாசி பட்டறை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில் அங்கு ஒரு கழிவு நீர் டேங்கர் லாரி கழிவுநீரை கொட்ட வந்துள்ளது. அந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "குடியிருப்புகள் அதிகமுள்ள இந்த பகுதியில் நள்ளிரவில் லாரி மூலம் கழிவு நீரை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இத னால் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்க ளுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே லாரியை நாங்கள் சிறை பிடித்துள்ளோம்” என்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டுஅவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வந்து பொது மக்களிடம் சமரசம் பேசி இனிமேல் அவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறிய பின் லாரி விடுவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி