திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

ALERT: திருச்சியில் இடி மின்னலுடன் கூடிய மழை; மக்களே எச்சரிக்கை

ALERT: திருச்சியில் இடி மின்னலுடன் கூடிய மழை; மக்களே எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 25 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   கடலோர ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி,புதுக்கோட்டை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 25 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரத்தில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வழக்கத்தை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி