விருதுநகரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்காமல் இருப்பது, சமுதாய ரீதியாக சண்டைகள் வருவது போன்ற பல்வேறு சீர்கேடுகளை தமிழகம் கண்டுவருகிறது. மத்திய அரசு கொடுக்கும் பணம் முறையாக செலவழிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மத்திய அரசு மீது ஸ்டாலின் அரசு பழிபோடுகிறது. இதையெல்லாம் தடுக்க திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்” என்றார்.