ஏர்போர்ட் புதிய முனையம் - முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்

574பார்த்தது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம் இன்று காலை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதியே பிரதமா் நரேந்திர மோடி இந்த முனையத்தை திறந்து வைத்திருந்தாலும், பழைய விமான நிலையத்திலிருந்து அலுவலகங்களை மாற்றும் பணியும், இறுதிக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வந்ததால், முனையம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் நிலவியது. தற்போது, அனைத்து விமான நிறுவனங்களுக்கான அலுவலகங்கள், பாதுகாப்புப் படையினருக்கான அலுவலகங்கள், விமானங்கள் இயக்குவதற்கான சேவை புரியும் அலுவலகங்கள் என அனைத்தும் புதிய முனையத்துக்குள் கொண்டுவரப்பட்டு தயாா்நிலையில் உள்ளன.

இதனையடுத்து இன்று காலை 6 மணி முதல் இந்த முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. இனி அனைத்து விமானங்களும் புதிய முனையத்தில் இயக்கப்படும். இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னையில் இருந்து புதிய முனையத்திற்கு வந்த முதல் விமானத்திற்கு விமான நிறுவனம் சார்பில் தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு (வாட்டர் சல்யூட்) அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி