"ஸ்ரீ கரந்தை ஈஸ்வரி "மஹா கும்பாபிஷேக விழா"

77பார்த்தது
"ஸ்ரீ கரந்தை ஈஸ்வரி "மஹா கும்பாபிஷேக விழா"
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே மேலக்கரந்தையில் அமைந்துள்ள "அருள்மிகு ஸ்ரீகரந்தை ஈஸ்வரி சமேத ஶ்ரீகரந்தை ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று "நூதன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், சோமகும்பம், சூரிய கும்பம், சதுர் தோரண பூஜைகள், வேதிகார்ச்சனை, யாக வேள்வி, வேதபாராயணம், ரஷா பந்தனம், கோ பூஜை, மூலஸ்தான துவார பூஜை, ஸ்பரிசாஹீது, நாடி சந்தனம், திரவ்யாகுதி, வாஸ்த்ராகுதி, பூர்ணாகுதி, யாத்ரா தானம், தீபாராதனை என பகுதி பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் காலை 10. 30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ கரந்தை ஈஸ்வரி மற்றும் கரந்தை ஈஸ்வரன் சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு, இளநீர், தயிர், என பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மேலக்கரந்தை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து ஆலயத்தில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி