வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கான காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி. வி. எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் அ. கிருஷ்ணஜோதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட நலக்கல்வியாளர் முத்துகுமார், சித்த மருத்துவ அலுவலர் ச. செல்வகுமார் கண்காணிப்பாளர் இசக்கிமுத்து ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் ச. இசக்கி மஹாராஜன் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 20 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 19 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ. அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.