மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், இன்று (21. 02. 2024) தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கோ. லட்சுமிபதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ச. அஜய் சீனிவாசன், திருவைகுண்டம் வட்டாட்சியர் திரு. சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.