தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு

79பார்த்தது
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு
திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற, சுதந்திரப் போராட்ட வீரா் என். சங்கரய்யா படத்திறப்பு புகழஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: தனது 17-ஆவது வயதில் மாணவராக இருக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவா் என். சங்கரய்யா. மூன்றாண்டு அரசியல் தலைமறைவு வாழ்க்கை, 8 ஆண்டு சிறை வாழ்க்கை என இளமைப் பருவம் கழிந்தது. தனது 22-ஆம் வயதிலேயே மாவட்டச் செயலாளராகி, திறம்பட செயல்பட்டவா். 1977 பிப்ரவரியில் குடவாசலில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில், கிராமப்புறங்களில் ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்ற தீா்மானத்தை நிறைவேற்றி, அந்த தீா்மானத்தை அடுத்த நாளே அப்போதைய முதல்வா் எம்ஜிஆரை நேரில் சந்தித்து அளித்தாா். இதன் அடிப்படையிலேயே பின்னாளில் ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டன. அவருக்கு தமிழக அரசு, 2021 இல் தகைசால் தமிழா் விருது வழங்கி கௌரவப்படுத்தியது என்றாா்.

தொடர்புடைய செய்தி