6- நாள் நிகழ்ச்சியில் புலி வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்

57பார்த்தது
6- நாள் நிகழ்ச்சியில் புலி வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்
திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில் மாசிப் பெருவிழா 6- நாள் நிகழ்ச்சியில் புலி வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமாள் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.


திருத்தணி- பிப்ரவரி-20

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயில் ஆகும்

இந்த திருக்கோயிலில் மாசி பெருவிழா நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது

இந்நிகழ்வில் 6- நாள் இன்று

உற்சவர் முருகப்பெருமான் புலி வேட்டைக்கு திருக்கோயிலில் இருந்து புறப்பட்டார்

காட்டுப்பகுதியில் புலியை வேட்டையாடி புலியுடன் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி- தெய்வயானை தாயாருடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி திருக்கோயில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

உற்சவர் முருகப்பெருமான் வெற்றிகரமாக புலி வேட்டையாடி ஊர்வலமாக பக்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்வில் மஞ்சள் தண்ணீர் தெளித்துக் கொண்டு பக்தர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி