திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் என்று இயங்கி வருகிறது. ரூ.3 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் பெயரை மாற்றி கலைஞர் நூற்றாண்டு தினசரி காய்கறி அங்காடி என்று வைப்பதற்கான தீர்மானத்தை திருத்தணி நகராட்சி நகர மன்றம் நிறைவேற்றியுள
்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருத்தணி தொகுதி அமைப்பாளர் தியாகராஜன் தலைமையிலான காங்கிரசார் திருத்தணி நகராட்சியி
ல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து, காமராஜர் புகழ் ஓங்குக என்று கூறிக்கொண்டு ஒன்றுதிரண்டு ஊர்வலமாக சென்று, திருத்தணி நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியரிடம் காமராஜர் பெயரை மாற்றம் செய்யக் கூடாது என மனு அளித்தனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் வைக்க கூடாது என்று எதிர்ப்பு த
ெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். மேலும் இதன் அருகில் இருந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட
்டுள்ளது. போக்குவரத்து இடையூறு என்று அகற்றியதை நாங்கள் ஏற்கின்றோம்.
ஆனால் அந்த சிலையை மீண்டும் காய்கறி மார்க்கெட் முன்பு வைத்தால் எந்த நெரிசலும் ஏற்படாது, போக்குவரத்தும் பாதிப்பு இல்லை. அதனை காமராஜர் மார்க்கெட் என்று பெயர் வைத்து, அதன் அருகில் காந்தி சிலையை வைக்க வேண்டும் என்று இவர்கள் மனு அளித்ததாக தெரிவித்து, இந்த கருத்தை மனுவில் உள்ளதை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.