சேலம்: காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறுகையில், "மதுகுடித்துவிட்டு பட்டாசு வெடித்துள்ளனர், ஆனால் வண்டியில் போகும்போது பட்டாசு வெடித்ததாக கூறுகின்றனர்" என்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.