டெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்த பாகி., பெண் ஒருவர் எல்லையில் உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “அந்த தாக்குதலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? உயிரைக் காப்பாற்ற சிகிச்சைக்காக நாங்கள் வந்தோம். இவ்வளவு காலமாக உள்ளூர்வாசிகள் எங்களுக்கு அளித்த விருந்தோம்பலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். பாகிஸ்தானில் பிறந்தது நாங்கள் செய்த குற்றமா?” என்றார்.