திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில்பணியாற்றும் வட்டாட்சியர்
மதிவாணன் அவர்களுக்கு
வட்டாசியர்களுக்கு அரசு சார்பில் ஜீப் பொலோரா வாகனம் வழங்கப்பட்டுள்ளது
இந்த வாகனம் மூலமே அரசு சம்பந்தமான பணிகளுக்கு சென்று வரவும், பகுதிவாசிகளின் நிறை குறைகளை கேட்க, கிராமம் தோறும் சென்று வரவும் பயன்படுத்துகின்றனர்.
வட்டாட்சியருக்கான
இந்த வாகனம் பின்பக்க டயருக்கு மேலேயும் வாகனத்திற்கு உள்ளே செல்லும் கதவு அருகிலேயே ஆங்காங்கே உடைந்து பிளாஸ்டிக் டேக் போட்டு கட்டியும்
டேப் கொண்டு ஓட்டியும் ஆபத்தான முறையில் இயக்கப்படுகிறது வாகனத்தை முறையாக சீரமைக்காமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் வகையில் நிலையில் உள்ள இந்த வாகனத்தை தற்போதும் சீர் செய்யாமல் அலட்சியத்துடன் வட்டாட்சியர் பயன்படுத்தி வருகின்றார்
வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுதினை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அந்த வாகனத்தை இயக்காமல் பயன்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்க வேண்டும்
மனிதர்களுக்கு கை கால் உடைந்தால் மருத்துவர்கள் மாவு கட்டுப்போடுவதை போன்று வாகனத்திற்கு
சேதம் ஏற்பட்டதை டேக் மற்றும் டேப் ஒட்டி தொடர்ந்து பயன்படுத்தி அலட்சியமாக இயக்கி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.