*ஆவடி அருகே நடைபெற்ற அனைத்து வாகன ஒட்டுநர்கள் நலசங்க முப்பெரும் விழாவில் 100க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்*
தமிழ்நாடு புதிய 7 ஸ்டார் அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் முப்பெரும் விழா ஆவடி அடுத்த சேக்காடு சமுதாய கூடத்தில் நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வாகன ஒட்டுநர்கள் 100 பேருக்குஅடையாள அட்டை மற்றும் காப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டது. முன்னதாக இரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மேலும் வாகன ஒட்டுநர்கள் நலசங்க உறுப்பினர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கருணாகரன், செயலாளர் சரண் ராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் மகேஷ், ஆவடி துணை தலைவர் ராஜேஷ் துணை செயலாளர் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.