கவரப்பேட்டை, ஆர்எஸ்எம் நகரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கற்பக விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை, ஆர்எஸ்எம் நகரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய இந்த கும்பாபிஷேக நிகழ்வில் மூன்று நாட்களாக பல்வேறு வித பூஜைகளை அடுத்து நான்கு கால யாக பூஜைகளும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று பூஜை, வேள்வி, மஹாபூர்ணஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பிறகு யாத்ரா தானம், கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும், காலை விமான கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், அனைத்து மூர்த்திகளுக்கும் சமகால கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனை தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.