கும்மிடிப்பூண்டி
ஜி என் டி நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் சாலையின் இருபுறமும் உயர்ந்து வளர்ந்த மரங்களையும் வெட்டி அகற்றினர் கடைக்கு முன்பாக இருந்த ஜெனரேட்டரை ராட்ச கிரேன் உதவியுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் இரு புறங்களிலும் தனியார் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர் மின்வாரியத்தினர் மின் இணைப்புகளை துண்டித்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். சாலையின் இரு புறங்களில் உள்ள மரங்களை அகற்றக்கூடாது எனவும் மேற்கூரைகளைப் பிரிக்க அவகாசம் தரவேண்டும் எனவும் பொதுமக்கள் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அதனைப் பொருட்படுத்தாமல் மரங்களை வெட்டியும் மேற்கூரைகளை அகற்றியும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்
ராட்சசக்ரின் உதவியுடன் கடைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பெரிய ஜெனரேட்டர் ஒன்று பாதுகாப்பாக கொண்டு சென்று வீட்டின் மேல் தளத்தில் கொண்டு சென்று வைத்தனர்.