நெல்லை தச்சநல்லூர் அழகனேரியை சேர்ந்த செண்டு(67) என்பவரது வீட்டு அருகே உள்ள கிணற்றை ஆறுமுகம் என்பவர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் இன்று(செப்.18) செண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.