வி. கே. புரம் அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர் கைது

1065பார்த்தது
வி. கே. புரம் அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர் கைது
நெல்லை வி. கே. புரத்தை சேர்ந்த இளமாறன் என்பவர் பாபநாசம் சிவன் கோவில் முன்புள்ள ஆற்றங்கரையில் குளிக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது சட்டை பையில் இருந்த ரூபாய் 14, 700 அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காவலாகுறிச்சி வளையான் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் திருடியது தெரியவந்தது. போலீசார் கிருஷ்ணனை இன்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி