நெல்லை டவுண் நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் மூலத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் திருவீதி உலா எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்திருக்கும் சின்ன தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.