நெல்லை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். ஆட்சியர் கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.