தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநில பேரிடரை எதிர் கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையம் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்காலிகமாக கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியுள்ள இந்த மையத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று(செப்.17) திறந்து வைத்தார். இந்த மண்டல அலுவலகத்தில் தேசிய பேரிடர் குழுவினர் 32 பேர் நவீன உபகரணங்களுடன் முகாமிட்டு இருப்பார்கள்.