தமிழகத்தில் தசரா திருவிழாவின் ஒரு அங்கமான சரஸ்வதி பூஜை இன்று (அக்.,11) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லையில் அரசு அலுவலகங்கள், ஆட்டோ ஸ்டாண்டுகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் பொதுமக்கள் சரஸ்வதி கடவுளுக்கு பூஜை வைத்து வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக படையலில், அவல், பொரி, பாயாசம், சுண்டல் போன்ற பலகாரங்களை கடவுளுக்கு பிரசாதமாக வைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களையும் பூஜை செய்கின்றனர்.