தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆசிரியை குத்திக் கொலை செய்த சம்பவத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ரமணி என்ற என்பவரை மதன் என்பவர் கொடூரமாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசமிட்டனர்