ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. திருமண சீசன் தொடங்கியுள்ளதால் இந்த விலை உயர்வு மக்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. மேலும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,810-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா உயரந்து ரூ.77.20-க்கும், 1 கிலோ வெள்ளயின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.77,200-க்கும் விற்பனையாகிறது.