வீடியோ எடுத்த மருத்துவருக்கு சிறை

86427பார்த்தது
வீடியோ எடுத்த மருத்துவருக்கு சிறை
மும்பையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அந்த மருத்துவமனையில் பயின்று வந்த மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுக்க முயற்சி செய்தார். இதற்கான வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.