தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகளை நிற்க வைத்து திமுக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல வைத்தனர்.