கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை திறந்து வைத்த முதல்வர்!

29465பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை திறந்து வைத்த முதல்வர்!
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை, வீரர் சிலையை திறந்து வைத்த பின், அரங்கையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ரகுபதி, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ரூ.62.78 கோடி மதிப்பில் மதுரை அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடக்கிறது. முதல் பரிசாக மகிந்திரா தார் கார்கள், இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. நேரலையில் காண... https://www.youtube.com/watch?v=x3ZqnzYMUEM
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி